னித வாழ்வில் அனைத்தையும் தீர்மானிக் கக்கூடிய கிரகங்கள் பயணிக்கும் 27 நட்சத்திர கூட்டமைப்பில் 21-ஆவது நட்சத்திரம் உத்திராட நட்சத்திரமாகும்.

Advertisment

இந்த உத்திராடம் ஆன்மகாரகள், பிதர்காரர்கள் என்று போற்றப்படும் சூரியனின் மூன்றாவது நட்சத்திரமாகும்.

பால்வழி மண்டலத்தில் சந்திரன் உத்திராட நட்சத்திர கோணத்தில் பயணிக்கும் காலத்தில் பிறப் பவர்கள் தங்களை உத்திராட நட்சத்திரம், தனுசு ராசியாகவும் 2 3 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் மகர ராசியாகவும் அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்கள்.

இது ஒரு பெண் நட்சத்திரமாகும். இவர்கள் சனியின் குணத்தை மிகுதியாகவும், குருவின் குணா திசயங்களை குறைவாகவும் பெற்றிருப்பார்கள்.

Advertisment

dd

இதன் தமிழ்ப் பெயர் உத்திராடம். தமிழ் நிகண்டு களில் ஆணி, ஆடி, கடைக்குளம், விச்சுவ நாள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் உத்திராடஷா என்று அறியப்படுகின்றது. உத்திராடஷா என்றால் கடவுளின் கூட்டம் என்று பெயர். இதன் அதிதேவதையாக கணபதி என்றும் பிரம்மா என்றும் விசுவ தேவன் என்றும் பலவகையான தகவல்கள் நிகண்டுகளின்மூலம் எடுத்துரைக்கப்படுகின்றது .

இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதியாக குருவும், சனியாகவும், நட்சத்திராதிபதியாக சூரியனும், நவாம்ச நாதர்களாக உத்திராடம் ஒன்று என்றால் குருவும், உத்திராடம் இரண்டு என்றால் சனியும், உத்திராடம் மூன்று என்றால் சனியும், நான்கு என்றால் குருவாகவும் வருவார்கள் .

இது குருவின் கர்மப்பதிவு கொண்ட நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அரசர்கள் பட்டாபிஷேகம் செய்துகொண்டதற்கான சான்றுகள் உள்ளது.

நமது வாழ்வியல் பயணத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான பழமொழிகள் வழக்கத்தில் உள்ளது. அப்படி இந்த உத்திராடம் நட்சத்திரத்திற் கான பழமொழி என்னவென்று பார்ப்போமேயானால்.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர்க் கோடியில் நிறுத்தும் என்று கூறப்படுகின்றது.

உத்திராட நட்சத்திரத்தில் எளிமையான குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும். ஆனால் அந்த குழந்தையின் வளர்ச்சியானது அந்த குடும்பத்தின் வளர்ச்சியை ஒத்தே இருக்கும். ஒரு பெரும் பொருளாதார உயர்வினை அந்த குழந்தையின்மூலம் அந்த குடும்பம் அடையும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரையும் நம்பி ஏமாற்றம் அடைவார்கள். மக்கள் விரோத செயலில் ஈடுபடுபவர்களை; தட்டிக் கேட்பார்கள்.

இந்த உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமையப்பெறுவதில்லை. 40 வயதிற்குமேல்தான் இவர்களின் பொருளாதாரநிலை பெரும் உச்சத்தை எயட்டும். இவர்களுக்கு 28 வயது முதல் 31 வயதுக்குள் ஒரு பெரும் சிறப்பு பொருந்திய நிகழ்வு நிகழ் வாய்ப்புகள் உள்ளது. இவர்களின் கல்வி நிலை- அதாவது ஆரம்ப கல்வி நிலை பெரும் சிறப்பை ஏற்றுவதில்லை. முதல் தசை சூரியன் முடிந்து அட்டமாதிபதி சந்திரனின் தசை நடக்கும். இதனால் ஏற்கத்தக்க செயல்பாடுகளை செய்ய முடியாமல் நிறுத்தப்படும்.

இவர்களின் நட்சத்திர நாதன் சூரியன் என்பதால் எதிலும் முதன்மைத் தன்மை பெறுவது இவர்களின் இயல்பிலேயே இருக்கும். இவர்களின் வம்சாவளிகளில் குழந்தை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும், கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினையும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

இவர்கள் குழந்தைத்தனமாகவும் புகழ்ச்சிக்கு மயங்கும் குணமும் பெற்றவர்கள். இவர்களின் வம்சத்தில் கோவில் சம்பந்தப்பட்ட தர்மகர்த்தா, நிர்வாகிகள் போன்றோர் அமையப் பெற்றிருப்பார்கள். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் இந்த உத்திராட நட்சத்திரத்தில் இருக்கப் பிறந்தவர்கள் ஆண்களாக இருந்தால் விந்தணு பிரச்சினையும் பெண்களாக இருந்தால் கருமுட்டை பிரச்சினையும் நிச்சயம் இருக்கும்.

இவர்கள் அறவழியில் நடப்பவர்களாகவும் பிறர்களுக்கு உதவிசெய்யும் குணம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் நன்றி உணர்வு, புத்திசாலித்தனம் அனுதாபம், அடக்கம், கடின உழைப்பு போன்ற நற்குணம் படைத்தவர் களாக இருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க மாட்டார்கள். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கவும் மாட்டார்கள். ஆன்மிகத்தில் அதீத நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறப்பெடுத்தவர்கள் கண், பல், முதுகுத்தண்டு, சிறுநீரகம், உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் இருக்க வாய்ப்புகள் உண்டு. இவர்கள் உடல் சூட்டினை சீராக வைத்துக்கொள்வது சிறப்பு. இளமையில் கல்வி கற்கும் வயதில் சற்று கவனம் தேவை. இவர்களுக்கு வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில்களும் வெளிநாடுகளின்மூலம் வருமானமும் அமையப்பெறும்..

உத்திராடம் ஒண்ணாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் குருவின் வீடான தனுசிலேயே அமையப்பெற்று, வர்க்கோதமம் என்ற நிலையை அடைந்திருக்கும். இது சிறப்பென்றாலும் பெரும் சிறப்பில்லை. ஏனென்றால் அட்டமாதிபதியின் தொடர்பு இங்கு ஏற்படுகிறது. இதனால் இளம் வயதில் கல்வி கற்கும் சூழல்களில் சில நெருடல்களையும் இவர்கள் சந்திக்க நேரிடலாம். இவர்களின் தொழில் நிலை பொருத்தவரை சந்திரனின் காரகமான பயணம், டிராவல், ஏஜென்சி, உணவு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள், விவசாயம் போன்றவற்றின்மூலம் தங்களை சிறப்படைய வைத்துக்கொள்வார்கள்.

உத்திராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் மகரத்தில் அமையப்பெறும். இந்நிலையானது திருமணத்தின்மூலம் முன்னேற்றம், கலைகளின்மூலம் வருமானம் கிடைக்கும். பாக்கியாதிபதியான சூரியன் தந்தை என்று காரகம் பெறுவதனால் தந்தையின் தொழில் போன்றவை அமையும். மேலும் தொழிற்கல்வி இவர்களுக்கு சிறப் பினைத் தரும்.

உத்திராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் கும்பத்தில் சென்றடையும். இந்நிலையானது திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உயர் கல்வியில் தடை போன்ற சூழல்கள் உருவாகும் உடலை வருத்தி செய்யப்படும் தொழில்கள் அடிமை ஜீவனம் போன்றவை இவர்களுக்கு அமையும். இரும்பு சம்பந்தப்பட்ட கனரக வாகனங்களை இயக்கும் தொழில்களும் இவர்களுக்கு அமையும்.

உத்திராடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் மற்றொரு குருவின் வீடான மீனத்தில் அமையப்பெறும். இந்நிலையா னது கல்வி நிறுவனங்கள் அமைத்துக் கொள்வது வாக்கின்மூலம் சம்பாத்தியம் உயர் கல்வியினை அடையும் தகுதி பொறியியல் துறையில் சிறப்படைய வாய்ப்பு, பெரும் மருத்துவர்களுக்கான கல்வி, மருத்துவர்களாக பிரதிபலிப்பது, கல்வி நிறுவனங் கள் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டுவது, வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில்களும் வேலைகளும் அமையப் பெறுவது போன்ற சூழ்நிலையை உருவாக்கி சிறப்பினைத் தரும்.

இவர்கள் எந்த காரணத்தைக்கொண்டும் குரு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. மேலும் குருமார்களுக்கு கைங்கரியம் செய்வதன்மூலம் வாழ்வில் பெரும் சிறப்பினை அடையமுடியும் இவர்கள் தொழில் புரியும் இடங்களிலும் பணியிடங்களிலும் அலங்கரிக்கப்பட்ட தந்தத்தினை உடைய யானையின் உருவத்தை வைத்துக் கொள்வது பெரும் சிறப்பினைத் தரும்.

வணங்கவேண்டிய தெய்வம்: சூரியன் மற்றும் தக்ஷிணாமூர்த்தி.

அணியவேண்டிய ரத்தினம்: மாணிக்கம்.

வழங்கவேண்டிய விருட்சம்: பலாமரம்.

வணங்கவேண்டிய தலம்: சூரியனார் கோவில் மற்றும் ஆலங்குடி.

(அடுத்த இதழில் திருவோணம்)

செல்: 80563 79988